புதிய அரசு மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு
மூலைக்கரைப்பட்டி, களக்காட்டில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, களக்காடு பெல்ஜியம் அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் வள்ளியூரில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று மூலைக்கரைப்பட்டி மருத்துவமனையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதிமோகன் தலைமை தாங்கினார். கட்டிட பணிக்கு கூடுதலாக தொகுதி வளர்ச்சி நிதி ரூ.10 லட்சம் வழங்கிய ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் சாஜன் மேத்யூ, உறுப்பினர்கள் முத்துக்குமார், ஆதம், மீனா, விஜயராணி, கொம்பையா, மாரியம்மாள், மரியசாந்தி, காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., களக்காடு பெல்ஜியம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.