மனைவி கண் முன்பு புதுமாப்பிள்ளை பலி


மனைவி கண் முன்பு புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 4:24 PM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில், மனைவி கண் முன்பு புதுமாப்பிள்ளை பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பேரிகை அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில், மனைவி கண் முன்பு புதுமாப்பிள்ளை பலியானார்.

புதுமாப்பிள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேரிகை அருகே உள்ள குட்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனப்பா. இவரது மகன் ஆஞ்சியப்பா (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (20). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.

ஆஞ்சியப்பா நேற்று முன்தினம் இரவு குட்லப்பள்ளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் தனது மாமனார் ஊரான தியாரசனப்பள்ளிக்கு மனைவி வெண்ணிலாவுடன் சென்று கொண்டு இருந்தார். பேரிகை-சூளகிரி சாலையில் ஏ.செட்டிப்பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் புதுமண தம்பதிகள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

பரிதாப சாவு

அதில் ஆஞ்சியப்பா சிறிது நேரத்தில் மனைவி கண் முன்கே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெண்ணிலா படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வந்து படுகாயம் அடைந்த வெண்ணிலாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் பலியான ஆஞ்சியப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேரிகை அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை, மனைவி கண் முன்பு பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story