புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x

புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

அரியமங்கலம்:

புது மாப்பிள்ளை

திருச்சி அரியமங்கலம் சீனிவாசாநகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 27). இவருக்கும், தமிழ்ச்செல்வி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 6 மாதங்களில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் தமிழ்ச்செல்வி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அன்று முதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த அரவிந்த், வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். கடந்த 6-ந் தேதி இரவு தூங்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனது அறைக்கு சென்ற அரவிந்த், மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்து, அவருடைய பெற்றோர் கதவை தட்டினர். அரவிந்த் கதவை திறக்காததால், உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அரவிந்த் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அரவிந்தின் தாய் ஜெயமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story