புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
செம்பனார்கோவில் மத்திய தி.மு.க.சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் மத்திய தி. மு. க. சார்பில் பொறையாறு அருகே மாணிக்கபங்கு ஊராட்சி ஆணைக்கோவில் கிராமத்தில் உடன்பிறப்புகளாய் இணைவோம், தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய தி.மு.க.செயலாளர் அமுர்தவிஜயகுமார் தலைமை தாங்கினார், தி.மு.க.கிளை செயலாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். முகாமில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை சொல்லி தி. மு. கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றார். ஆணைக்கோவில் கிராமத்தில் 100 -க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர். முகாமில் மாவட்டத் துணைச்செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், தரங்கம்பாடி நகர செயலாளர் முத்துராஜா,மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.