அமாவாசை பூஜை
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமாவாசை பூஜை நேற்று நடந்தது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாசிமாத சர்வ அமாவாசை பூஜை நடந்தது. இதில் சாமிக்கு பால், பழம், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், விபூதி, தேன், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, செந்துறை, கோபால்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித தீர்த்தத்தில் நீராடி விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுன குரு ஜீவசமாதி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள தண்டபாணி சாமி சன்னதியில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.