ரூ.3½ கோடியில் புதிய நகராட்சி அலுவலகம்
சோளிங்கரில் ரூ.3½ கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்ட அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலந்து கொண்டு ரூ.3½ கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பணிகளை தரமானதாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.
நகராட்சி ஆணையர் பரந்தாமன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், நகராட்சி துணைத் தலைவர் பழனி, காங்கிரஸ் நகர தலைவர் கோபால், ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.