புகார் தெரிவிக்க புதிய எண்கள்


புகார் தெரிவிக்க புதிய எண்கள்
x

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்ற நடவடிக்கை

குழந்தைதொழிலாளர்களை எவ்வித பணிகளிலும், அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணியமர்த்துவதும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தமது குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய எண்

குழந்தைதொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டம் 1976-ன் படி ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும். குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க மற்றும் புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் 1800 42 52 650 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது கூடுதலாக பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து புகார் தெரிவிக்க மேற்கண்ட உதவி எண்களை பயன்படுத்தலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story