ரூ.35 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


ரூ.35 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x

மேலபுலம் ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டை

ஓச்சேரியை அடுத்த மேலபுலம் ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து வேளியநல்லூர் ஊராட்சி பிள்ளைபாக்கத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் நிழற்குடை அருகில் தி.மு.க. கொடியினை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பாத்திமா, தாசில்தார் சுமதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தராம்மாள் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமூத்து, சிவராமன், ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி, பெருமாள், ரவீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனிதா நாராயணன், அமுதா சண்முகம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story