புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்


புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஒன்றியம் அருண்மொழிதேவன் ஊராட்சியில் ஏற்கெனவே இருந்த ஊராட்சி அலுவலகம் சேதமடைந்ததை அடுத்து அதனை அகற்றிவிட்டு ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனையடுத்து புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் கோமதி தமிழரசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் மனோகர் வரவேற்றார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், ஞான.இமயநாதன், முருகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் அருள்மலர் நன்றி கூறினார்.


Next Story