ரூ.3.42 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
திமிரியில் ரூ.3.42 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
திமிரியில் ரூ.3 கோடியே 42 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தினர்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகநாயகி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நவாஸ் சையத், ஜெயஸ்ரீ , மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவக்குமார், தன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி. சாரதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மூர்த்தி, குமார், குப்பன், கருணாநிதி, அமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். கலைமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.