புதிய பயணிகள் நிழற்கூடம்


புதிய பயணிகள் நிழற்கூடம்
x

சிந்தாமணியில் புதிய பயணிகள் நிழற்கூடத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணியில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அரியகுளம் பஞ்சாயத்து மேல அரியகுளத்தில் ரூ.9 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார். நாகல்குளத்தில் கட்டப்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் ஜேசு மிக்கேல், காங்கிரஸ் நிர்வாகிகள் வி.சுப்பிரமணியன், உன்னங்குளம் சுப்பிரமணியன், அழகியநம்பி, செல்லப்பாண்டி, வாகைதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story