ரேஷன் கார்டுதாரர்களுக்கு புது மண்பானை


ரேஷன் கார்டுதாரர்களுக்கு புது மண்பானை
x

ரேஷன் கார்டுதாரர்களுக்கு புது மண்பானை

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக பச்சரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், முந்திரி, திராட்சை, கரும்பு மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல், புதுமண்பானையில் பொங்கல் வைக்கும் வகையில் புதிய மண்பானை மற்றும் புதிய மண் அடுப்பு ஆகியவற்றை ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வு மலரும்' என்று கூறியுள்ளனர்.

----


Next Story