ரூ.7½ லட்சம் மதிப்பில் புதிய மின் வழித்தடம்
திருவெண்காடு அருகே ரூ.7½ லட்சம் மதிப்பில் புதிய மின் வழித்தடம்
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மேலையூர் கிராமத்தில் மின் சப்ளை செய்வதில் சிரமங்கள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரனிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதையடுத்து அவர் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மின்வாரியம் மூலமாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் மின்வாரிய உதவி பொறியாளர் தினேஷ் வரவேற்றார். இதில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய மின் வழித்தடத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ஞானவேலன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மின்வாரிய ஆக்க முகவர் சேகர் நன்றி கூறினார்.