சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க புதிய சிக்கல்..!

சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க புதிய சிக்கல்..!
x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஆறு கிராமங்களும், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட ஆறு கிராமங்களும் என 12 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை அகற்றி விமான நிலையத்தை அமைக்க கூடாது என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Next Story