புதிய ரேஷன் கடை


புதிய ரேஷன் கடை
x

வாழியூரில் புதிய ரேஷன் கடையை சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள வேடக்கொல்லைமேடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வந்தார்.

அவரிடம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர், மாணவ-மாணவிகள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பள்ளக்கொல்லை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், வாழியூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை, உணவு தானிய கிடங்கு ஆகியவற்றை சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில் போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் வீரமணி, வக்கீல் தினகரன், வாழியூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன், துணைத்தலைவர் காயத்ரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காளசமுத்திரம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


Related Tags :
Next Story