புதிய ரேஷன் கடை
கொட்டாரக்குடியில் புதிய ரேஷன் கடையை பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.
திருவாரூர் அருகே கொட்டாரக்குடியில் கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு புதிய கட்டிடம் கட்டிட திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா முன்னிலை வகித்தார். பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கினார். இதில் கல்யாணமகாதேவி கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.வி.கே. வெங்கடாசலம், செயலாளர் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் தவுலத் இக்பால், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவி விஜயகுமார், தவமணி ராஜமாணிக்கம், ஒப்பந்தக்காரர் ஆர்.வி.கே.குரு, தாசில்தார் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர், விற்பனையாளர் ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர்.