புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x

புதிய ரேஷன் கடையை தேவராஜி எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சுண்டம்பட்டி பகுதியில் புதிய முழு நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

முன்னதாக பச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பங்குதாரர்களுக்கு பங்கு ஈவு தொகையும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் கடன் பெற்றதற்கான ஆணையும் வழங்கினார்.

விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், கூட்டுறவு சார் பதிவாளர் ராமச்சந்திரன், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாசுந்தரேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story