ஆண்டவன் கோவில் அருகே தற்காலிக பாலத்தில் தார் சாலை அமைப்பு
ஆண்டவன் கோவில் அருகே தற்காலிக பாலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது.
பேராவூரணி;
பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன் கோவில் அருகே குறுகலான காட்டாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மாதம் இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க சுமார் 7.5 கோடி மதிப்பில் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைத்து தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த தற்காலிக பாலத்தில் ஜல்லிக் கற்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதால் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.மேலும் தூசி பரவுவதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த தற்காலிக பாலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலை அமைத்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வௌிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.