புதிய சாலை திறப்பு


புதிய சாலை திறப்பு
x

இளையான்குடி அருகே புதிய சாலை திறக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரியாண்டி ஊராட்சி, கருஞ்சுத்தி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராக்குகுமரேசன், ஒன்றிய கவுன்சிலர் உஷாராணிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ்கான், கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், கவுன்சிலர்கள் சாத்தையா, தவுலத், இப்ராகிம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story