மங்கலம்பேட்டை அருகே மழையால் உள்வாங்கிய புதிய சாலை
மங்கலம்பேட்டை அருகே மழையால் சாலை உள்வாங்கியது. தரமாக பணிகளை செய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கடலூர்
விருத்தாசலம்,
சென்னை - கன்னியாகுமாரி தொழில் தட சாலை விருத்தாசலம் வழியாக செல்கிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இதில் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே மங்கலம்பேட்டை புறவழி சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில், அந்த பகுதியில் கன மழை பெய்தபோது தரைப் பாலத்தின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை உள்வாங்கி சேதமடைந்தது.
எனவே, சாலை அமைக்கும் பணியை தரமானதாக செய்திட வேண்டும் என்றும், இதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story