நாங்குநேரியில் புதிய சாலை பணிகள்


நாங்குநேரியில் புதிய சாலை பணிகள்
x

நாங்குநேரியில் புதிய சாலை பணிகள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நாங்குநேரி-ஏர்வாடி செல்லும் சாலையில் உள்ள சூரன்குடி சாலை, ஏர்வாடி திருக்குறுங்குடி செல்லும் சாலை போன்ற சாலைகளை நெடுஞ்சாலைத்துறை மூலமாக மேம்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்படுகிறது.

புதிய சாலை பணிகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, ஏர்வாடி நகர தலைவர் ரீமா பைசல், முன்னாள் நகர தலைவர் நாசர், நகர செயலாளர் ஆபிரகாம், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்வர்சரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story