அரசு தொடக்கப்பள்ளிகளில் புதிய ஸ்மார்ட் வகுப்புகள்


அரசு தொடக்கப்பள்ளிகளில்  புதிய ஸ்மார்ட் வகுப்புகள்
x

அரசு தொடக்கப்பள்ளிகளில் புதிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

தோகைமலை ஒன்றியத்தில் உள்ள பொம்மாநாயக்கன்பட்டி, கீழவெளியூர் அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து தர வேண்டும் என்று ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து குளித்தலை சட்டமன்ற ெதாகுதி ேமம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்தில் அரசு ெதாடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று காலை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தார். இதேபோல் கண்ணிமார்பாளையத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதில், தோகைமலை ஒன்றிய ஆணையர் பாலசந்தர், பொதுக்குழு உறுப்பினர் தர்மர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துசாமி (கழுகூர்), அடைக்கலம் (கூடலூர்), ராஜலிங்கம் (கல்லடை), ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி ஆசைக்கண்ணு, தலைமை ஆசிரியர்கள் ஜெஸ்டின் திரவியம், இடும்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story