விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய நிலைய மருத்துவ அலுவலர் பொறுப்பேற்பு
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய நிலைய மருத்துவ அலுவலர் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி:
முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலராக பணிபுரிந்த டாக்டர் சாந்தி பணி ஓய்வு பெற்றார். இந்த பணியிடத்திற்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் ரவிக்குமார், புதிய நிலைய மருத்துவ அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராதா, துறைத் தலைவர்கள், டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story