புதிய தெருக்குழாய்கள் அமைப்பு
வடக்கு விஜயநாராயணத்தில் புதிய தெருக்குழாய்கள் அமைக்கப்பட்டது.
திருநெல்வேலி
இட்டமொழி,:
நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், அங்குள்ள 16 தெருக்களில் புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழாவையொட்டி, புதிய தெருக்குழாய்களை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
பஞ்சாயத்து தலைவர் மாணிக்கத்தாய் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் செல்வி லெக்கன், தி.மு.க. நிர்வாகிகள் மாடசாமி, சிவா, சக்தி, பலவேசம், அந்தோணி பீட்டர், வின்சென்ட், சந்தன மரியான், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story