புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சட்ட விரோத டாஸ்மாக் பார்களை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story