புதிய தார் சாலை அமைப்பு: மின்கம்பங்கள் இடமாற்றம்
புதிய தார் சாலை அமைப்பதால் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
ஈரோடு
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து திண்டல் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அங்கு சாலையின் இருபுறமும் குழி தோண்டப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே தார் சாலை அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலையின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருந்தது. எனவே மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிதாக தார் சாலை அமைக்கப்பட்ட இடத்தில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் நேற்று பிடுங்கி சாலையோரமாக நட்டு வைத்து மின்ஒயர்களை இணைத்தனர்.
Related Tags :
Next Story