கந்திலி மலைக் கோவிலுக்கு புதிய தார் சாலை-தேவராஜ் எம்.எல்.ஏ. தகவல்


கந்திலி மலைக் கோவிலுக்கு புதிய தார் சாலை-தேவராஜ் எம்.எல்.ஏ. தகவல்
x

கந்திலி மலைக் கோவிலுக்கு புதிய தார் சாலை அமைக்கப்படும் என தேவராஜ் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.

திருப்பத்தூர்

கந்திலி மலைக் கோவிலுக்கு புதிய தார் சாலை அமைக்கப்படும் என தேவராஜ் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.

கந்திலி அருகே உள்ள சின்னூர் பகுதியில் கந்திலி மலை முருகன்கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் ஏறி சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்தப் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது.

இந்த மலைக் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தி.மு.க.கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமையில் தேவராஜ் எம்.எல்.ஏ. 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலையை ஆய்வு செய்து கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கு அன்னதானம் மற்றும் நாட்டியாலயா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''கந்திலி முருகன் மலைக்கோவிலுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. இந்த மலைக் கோவிலுக்கு தமிழக முதல்-அமைச்சர் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் சாலை அமைத்து தரப்படும்''என்றார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எம்.துரைசாமி, கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பி.பிரபு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் நீளம்மாள், திருப்பதி மற்றும் கழக முன்னோடிகள் உஸ்மான், பல்லவன் தேவேந்திரன், அன்பு ரோஸ், முருகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story