ரூ.48 லட்சத்தில் புதிய தார் சாலை


ரூ.48 லட்சத்தில் புதிய தார் சாலை
x

உதயேந்திரத்தில் ரூ.48 லட்சத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி செய்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில் உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் பூசாராணி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற உறுப்பினரும், பேரூர் தி.மு.க. செயலாளருமான ஆ.செல்வராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் துணைத் தலைவர் மணி, அம்பலவாணன், டி.குமார், மன்ற உறுப்பினர் ரமேஷ், எழுத்தர் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story