பதிவை புதுப்பிக்க நாளை கடைசி நாள்
பதிவை புதுப்பிக்க நாளை கடைசி நாள்
திருப்பூர்
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது விவசாயிகள் 12-வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு செய்வது அவசியம்.் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 31 ஆயிரத்து 104 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதம் உள்ள 57 ஆயிரத்து 671 விவசாயிகள் நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) இ.கே.ஓய்.சி. முறையில் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே விவசாயிகள் அனைவரும் ஆன்லைன்பதிவு மூலம் புதுப்பிக்க, தங்கள் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையத்துக்கோ, கிராம தபால் அலுவலகத்துக்கோ சென்று விரல் கைரேகை மூலம் பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நாளைக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.