வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல ஏ.வி.பாலத்தில் புதிய பாதை அமைப்பு


வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல ஏ.வி.பாலத்தில் புதிய பாதை அமைப்பு
x

வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல ஏ.வி.பாலத்தில் புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

மதுரை


வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல ஏ.வி.பாலத்தில் புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்வு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிதான். மே 5-ந் தேதி அதிகாலை நடைபெறும் இந்த விழாவிற்கு மதுரை மட்டுமில்லாமல் வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மேலும் அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், உபயதாரர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றுக்குள் சென்று அழகரை தரிசனம் செய்வார்கள்.

கடந்தாண்டு கோரிப்பாளையம் பகுதி வழியாகதான் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் மூலம் சென்று வந்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே இந்தாண்டு பக்தர்கள் எவ்வித சிரமம் இல்லாமல் திருவிழாவை காண அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.

பலமுறை ஆய்வு

அதன்ஒரு பகுதியாக இந்தாண்டு கோரிப்பாளையம் தேவர் சிலை, மூங்கில் கடை வழியாக எந்த ஒரு வாகனத்தையும் அனுமதிக்க கூடாது என்று போலீசார் திட்டமிட்டனர். மேலும் போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் பல முறை வைகை ஆற்று பகுதிக்கு சென்று பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் முக்கிய பிரமுகர்களை திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகளை ஆய்வு செய்தார்.

அதில் கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து ஏ.வி.பாலத்தில் ஏறும் பகுதியில் வழியை ஏற்படுத்தி மூங்கில் கடை வழியாக முக்கிய பிரமுகர்களை வாகனங்களில் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஏ.வி. பாலத்தில் தற்காலிக பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதை யொட்டி பாலத்தின் கிழக்குப்பகுதியில் கைப்பிடி சுவர்கள் உடைக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

புதிய பாதை

அதன் மூலம் முக்கியபிரமுகர்கள் வாகனங்கள் அனைத்தும் முனிச்சாலை, நெல்பேட்டை, அண்ணாசிலை வழியாக ஏ.வி.பாலத்தில் ஏறி, அது இறங்கும் இடத்தில் தற்போது அமைக்கப்பட உள்ள பாதை வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அமைப்பதன் மூலம் கோரிப்பாளையம் மூங்கில் கடை வழியாக எப்போதும் போது தடுப்புக்கள் அமைக்காமல் அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் மூங்கில் கடை பாதை வழியாக செல்லாமல் அங்குள்ள ஜவுளிக்கடை செல்லும் பாதை வழியாக செல்லுமாறு பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story