ரூ.16 லட்சத்தில் புதிய மின்மாற்றி


ரூ.16 லட்சத்தில் புதிய மின்மாற்றி
x

கும்பகோணம் அருகே ரூ.16 லட்சத்தில் அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே மலையப்பநல்லூர் ஊராட்சி, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் சில்வர் நகர் மற்றும் கொருக்கை ஊராட்சி புதுச்சேரி ஆகிய 3 பகுதிகளில் ரூ.16 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகள் திறப்பு விழா நடந்தது. சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான எஸ்.கே.முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெ.சுதாகர், கும்பகோணம் செயற்பொறியாளர் (வடக்கு) ஆர்.குணசீலன், உதவி செயற்பொறியாளர்கள் கே.சங்கர், டி.மாதவன், ஊராட்சி தலைவர்கள் ஆர்.பகவான்தாஸ், ரா.பிரேமாவதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story