ரூ.2.90 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு


ரூ.2.90 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு
x

தளபதிசமுத்திரம் கீழூரில் ரூ.2.90 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் தளபதி சமுத்திரம் கீழூரில் ஊராட்சி ஒன்றிய நிதி ரூ.2.90 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடந்தது. நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் ரிப்பன் வெட்டி, புதிய மின்மாற்றியை திறந்து வைத்தனர்.

தளபதி சமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அருள்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெபக்கனி செந்தில், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பருத்திப்பாடு ஊராட்சி ஆனையப்பபுரம் கிராமத்தில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகத்தை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தொடங்கி வைத்தார். பருத்திப்பாடு பஞ்சாயத்து தலைவர் ஊசிக்காட்டான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story