ரூ.15 லட்சத்தில் புதிய மின் மாற்றிகள்
பொறையாறு அருகே ரூ.15 லட்சத்தில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது
மயிலாடுதுறை
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே காட்டுச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் முன்னிலை வகித்தார். பொறையாறு உதவி மின் பொறியாளர் அன்புசெல்வன், வரவேறறார். இதில் மயிலாடுதுறை ராமலிங்கம்,எம்.பி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இரு மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர். விழாவில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story