28 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்


28 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்
x

சிவகாசியில் 28 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரி கூறினார்.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசியில் 28 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரி கூறினார்.

பொதுமக்கள் புகார்

சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 14 துணை மின் நிலையங்கள் உள்ளன. இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் குறைந்த அழுத்த மின் வினியோகம் இருப்பதாகவும், இதனால் மின்பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அடிக்கடி குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டு வரும் 28 இடங்களை கண்டறிந்து அங்கு புதிய டிரான்ஸ்பார்மர்களை வைத்து அந்த பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தனர்.

புதிய டிரான்ஸ்பார்மர்

அதன்படி தமிழக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து 28 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்களை வைக்க அனுமதி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறியதாவது:- தொழில்நகரமான சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சில இடங்களில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் தற்போது அந்த பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் வைக்க உள்ளோம். இன்னும் 2 வாரங்களில் இந்த பணிகள் முடிந்து பொது மக்களுக்கு தற்போது உள்ள குறைந்தஅழுத்த மின்சார பிரச்சினை சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் கிராமப்புறங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்களும், தொழில் அதிபர்களும் வரவேற்றுள்ளனர்.


Next Story