ராமநாதபுரத்தில் புதிய பாதாள சாக்கடை திட்டம்


ராமநாதபுரத்தில் புதிய பாதாள சாக்கடை திட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

வியாபாரிகளுக்கு வாகனம்

ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வாகனம் வழங்கும் விழா நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் கலந்துகொண்ட ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சாலையோர வியாபாரிகள் 80 பேருக்கு தள்ளுவண்டி வாகனங்களை வழங்கினார்.

விழாவில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் பேசியதாவது:-

ராமநாதபுரம் நகராட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.20 கோடி நிதியை பெற்றுத்தந்துள்ளார். தற்போதைய புதிய பஸ்நிலையம் இடமாற்றம் செய்யப்படாமல் அங்கேயே கட்டப்பட உள்ளது. ரூ.45 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு ரூ.20 கோடி வழங்க அனுமதி அளித்துள்ளது. மேலும், ரூ.25 கோடி நிதியை பெற்றுத்தர சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு பேசினார்.

புதிய பாதாள சாக்கடை திட்டம்

இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசியதாவது:-

ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது. அதில் சிறப்பு கவனம் செலுத்தி முதல்-அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச்சென்று புதிய திட்டம் நிறைவேற்றப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை மும்மடங்கு பெருகி விட்டதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், நகராட்சி துணை தலைவர் பிரவீன் தங்கம், காளீஸ்வரன், குமார், மணிகண்டன், ஜகாங்கீர் உள்பட கவுன்சிலர்கள், மேலாளர் நாகநாதன், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், தி.மு.க. நிர்வாகிகள் குணசேகரன், அகமது தம்பி, டி.கே.குமார், பி.டி.ராஜா, ஆர்.கே.கே.கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், துணை தலைவர் பிரவீன் தங்கம் நன்றி கூறினார்.


Next Story