மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம்


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் அருணசாச்சலம் தெரிவித்தார்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் அருணசாச்சலம் தெரிவித்தார்.

புதிய இணையதளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது.

தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய இணையதளத்தை அணுகும் நபர்கள் புதிய அலுவல் சார் இணையதளத்திற்கு தானாகவே திசைமாற்றப்பட்டு அதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நன்கொடை செலுத்தலாம்

இதன் மூலம் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். கோவிலுக்கு நன்கொடை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story