புதிய பணிமனை கட்டிட பணி


புதிய பணிமனை கட்டிட பணி
x

புதிய பணிமனை கட்டிட பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிய பணிமனை கட்டிடம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணிகளை ெதாடங்கி வைத்தார். தொடர்ந்து தொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பாடப்புத்தகங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. மாவட்ட பொருளாளர், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, சாகுல் ஹமீது, ஒன்றியச்செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புலியூரான் பாலமுருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் சோலை, மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story