தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விருத்தாசலம்,
ஆங்கிலபுத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற தூய பாத்திமாஅன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் 2022-ம் ஆண்டுக்கான நன்றி வழிபாடு நடைபெற்றது. பின்னர் இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பங்குத்தந்தை பால்ராஜ்குமார் தலைமையில், உலகஅமைதிக்காகவும், நாட்டு நலனுக்காகவும் ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், சாதி, மதம், இனம், மொழிவேறுபாடு இன்றி சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திடவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்து வந்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
கோனான்குப்பம்
இதேபோல விருத்தாசலம் அடுத்த கோனான்குப்பம் பெரிய நாயகி திருத்தலம், விருத்தாசலம் ஆற்காடு லுத்தரன் திருச்சபை மற்றும் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
கடலூர்
இதேபோன்று, ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் பேராயர் ராபர்ட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திராளன கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் நேற்று முன்தினம் இரவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது.