கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு


கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
x

மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆலங்குளம்

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்கள் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில், காக்கிவாடன்பட்டி நாராயண பெருமாள் கோவில், நதிக்குடி திருவேங்கட பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகுல பெருமாள் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் மாரியம்மன் கோவில், சமுசிகாபுரம் மாரியம்மன் கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண்மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. புத்தாண்டை கொண்டாடும் விதமாக கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காரியாபட்டி

காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோவில், முக்கு ரோடு மாரியம்மன் கோவில், சுப்பிரமணியசாமி கோவில், கே.செவல்பட்டி பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழச்செல்லையாபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏழாயிரம் பண்ணையில் சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோவில், வெம்பக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில், வன மூர்த்தி லிங்கபுரம் காளியம்மன் கோவில், கணஞ்சாம்பட்டி பாதாள துர்க்கை அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.



Next Story