புத்தாண்டு விழா


புத்தாண்டு விழா
x

திசையன்விளை பள்ளியில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.. பள்ளி ஆசிரியர் குசலகுமாரி வரவேற்று பேசினார். துணை தாளாளர் கமலா சுயம்புராஜன் தலைமை தாங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு குறித்து பேசினார். பள்ளி முதல்வர் அலமேலு முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகளுக்கு கலை மற்றும் பல்திறன் போட்டிகள் நடைபெற்றது.

பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்.


Next Story