புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏழை பெண்கள், முதியவர்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் சுமார் 200 பேருக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, சேலைகளை வழங்கினார். ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். நிர்வாக மேலாளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் ஜெபமணி, டிரஸ்டிகள் வெள்ளத்தாய், ஜெயராணி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தன்னார்வ தொண்டர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story