நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியானார்.
ராஜாக்கமங்கலம்,
நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியானார்.
புதுமாப்பிள்ளை
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் தனிஷ் (வயது 24). எலக்ட்ரீசியனான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 மாத கர்ப்பிணியாக அவருடைய மனைவி உள்ளார்.
நேற்று முன்தினம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின்சீரமைப்பு பணி நடந்தது. இந்த பணியில் ஒப்பந்த ஊழியராக தனிஷ் ஈடுபட்டார்.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தனிஷ் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். உடனே அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தனிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை தனிஷ் இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.