புதுமாப்பிள்ளை தற்கொலை


புதுமாப்பிள்ளை தற்கொலை
x

திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள கோபால்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 24). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கோபாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story