புதிதாக கட்டப்பட்ட கிழக்கு தாசில்தார் அலுவலகம்
புதிதாக கட்டப்பட்ட கிழக்கு தாசில்தார் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
திருச்சி பெரியகடைவீதி டவுன்ஹால் பகுதியில் கிழக்குதாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடமாகும். கிழக்குதாசில்தார் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்தநிலையில் திருச்சி விமானநிலையம் அருகே கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிதாக கிழக்கு தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது.
தரைதளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கிழக்கு தாசில்தார் அலுவலகத்தை திறந்து வைத்தார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், தாசில்தார் கலைச்செல்வி, மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.