மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதி 'போட்டோ ஷூட்'் எடுக்கலாம்


மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதி போட்டோ ஷூட்் எடுக்கலாம்
x

மதுரை ரெயில் நிலையத்தில் கட்டணம் செலுத்தி புதுமண தம்பதி ‘போட்டோ ஷூட்’் எடுக்கலாம்.

மதுரை

மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதியினர் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் (போட்டோ ஷூட்) எடுத்துக்கொள்ளலாம்.

ரெயில் பெட்டியை பின்புலமாகக் கொண்டு புகைப்படம் எடுக்க கூடுதலாக ரூ.1,500 கட்டணமாக செலுத்த வேண்டும். மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல், விருதுநகர், ராமேசுவரம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் புகைப்படம் எடுக்க ரூ.3 ஆயிரமும், ரெயில் பெட்டிகளின் பின்புலத்துடன் எடுக்க ஆயிரம் ரூபாய் கூடுதலாகவும் செலுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட கேரள மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ரெயில் நிலையங்கள், ஓடும் ரெயில்கள், சரக்கு ரெயில் நிலையங்கள், ரெயில்கள் ஆகிய இடங்களில் சினிமா, ஆவணப்படம் எடுப்பதற்கு அனுமதி பெற ரூ.20 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கட்டணமாக செலுத்தும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story