தூக்கில் பிணமாக தொங்கிய பெண்
முத்துப்பேட்டை அருகே திருமணமான 10 மாதங்களில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
முத்துப்பேட்டை அருகே திருமணமான 10 மாதங்களில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
10 மாதங்களுக்கு முன்பு திருமணம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் அஞ்சலி தேவி (வயது28). இவருக்கும் அருகில் உள்ள தில்லைவிளாகம் செங்காங்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (32) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அஞ்சலிதேவி கணவன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் அஞ்சலிதேவி பிணமாக தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று அஞ்சலி தேவியின் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்தநிலையில் அஞ்சலி தேவியின் தாயார் ஆண்டாள் (55) முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலி தேவி எப்படி இறந்தார்? தற்கொலை செய்துகொண்டரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவருக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.