மணக்கோலத்தில் புதுமண தம்பதி நடனம்


மணக்கோலத்தில் புதுமண தம்பதி நடனம்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மணக்கோலத்தில் புதுமண தம்பதி நடனம் ஆடினர். இது சமூக வலைதளங்களில் பரவுகிறது.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி - தங்கமாரி ஆகிய இருவருக்கும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அதற்காக மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவில்வாசல் முன்பு திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேளதாளத்திற்கு ஏற்றார்போல் புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் உற்சாக நடனம் ஆடினர்.

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பார்ப்போரை வியக்கச் செய்துள்ளது.



Next Story