பஸ்சில் கடத்த முயன்ற 23 கிலோ குட்கா பறிமுதல்


பஸ்சில் கடத்த முயன்ற 23 கிலோ குட்கா பறிமுதல்
x

ஓசூர் வழியாக திருவண்ணாமலைக்கு பஸ்சில் கடத்த முயன்ற 23 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் வந்த பயணி ஒருவரின் பையை சோதனை செய்த போது ரூ.17 ஆயிரம் மதிப்பிலான 23 கிலோ குட்கா இருந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னத்தூர் அருகே உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த வடமலை (வயது 45) என்பதும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்காவை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமலையை கைது செய்தனர். மேலும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story