ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவியாளர் வெட்டிக்கொலை


ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவியாளர் வெட்டிக்கொலை
x

மேலூர் அருகே ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவியாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவியாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தர்மசானபட்டி. இங்கு மதுரை மாவட்டத்தின் எல்லை பகுதியான புதுப்பட்டி விலக்கு என்னுமிடத்தில் தோப்பு அருகே உள்ள வீடு ஒன்றில் ராமன் (வயது 62) தனியாக வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகாமாநகரி என்னுமிடத்தில் கால்நடை மருத்துவ உதவியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

நேற்று இரவு 8 மணியளவில் ராமன் வீட்டில் இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவருடைய வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அவர்கள் ராமனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் கழுத்து மற்றும் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயம் அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் கீழவளவு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராமன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story