பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பு மீதான என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்;திட்டுவிளையில் நடந்தது
பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பு மீதான என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து திட்டுவிளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அழகியபாண்டியபுரம்,
பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பு மீதான என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து திட்டுவிளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்தும், கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நேற்று தோவாளை ஒன்றியம் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்டுவிளை சந்திப்பில் நடந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் ரவி முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் உதயகுமர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்யது இஷாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மிக்கேல் ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன், பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் மரியா அற்புதம், அசாருதீன், நபீலா ஆலிமா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் ஷேக் மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.